Search This Blog

Friday, April 29, 2016

அண்ணா பல்கலைகழக பொறியியல் கலந்தாய்வு-விண்ணப்பிக்கும் முறை

பொறியியல் கலந்தாய்விற்காக விண்ணப்பிக்கும் முறை


             இந்த கல்வி ஆண்டிற்கான  பொறியியல் கலந்தாய்வு(ENGINEERING COUNSELLING) இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கிறது.இதுநாள் வரை கலந்தாய்விற்கான விண்ணப்ப படிவங்கள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மாவட்டம் தோறும் கல்லூரிகளின் வாயுளாக விநியோகிக்கப்பட்டது.அதை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் .அனால் இந்த கல்வி ஆண்டு முதல் நமது சுய விவரங்களை பதிவேற்றுவது ,விண்ணப்ப கட்டணம் செலுத்துவது போன்றவை ஆன்லைன் முறையில் செய்யப்பட வேண்டும்.இவ்வாறாக பதிவு செய்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் தேவையான நகல்கள்/சான்றிதல்களை இணைத்து அண்ணா பல்கலைகழகத்திற்கு பதிவு தபால் மூலம் குறித்த தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்யும் முறையை இங்கு காணலாம்
     
            விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்யும் வழிமுறைகள் பற்றிய குறிப்பிற்கு ,கீழ்க்கண்ட இணைப்பை அழுத்தவும்

இதில் கீழ உள்ள “PROCEED”-யை அழுத்தியதும் அடுத்த பக்கத்திற்கு செல்லும்.
நேரடியாக இந்த பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
https://tnea2016online.annauniv.edu/divam7/log.php

இதில் மிக முக்கியமான பகுதிகள்

    • NEW USER REGISTRATION
    • REGISTERED USER LOGIN
    • PERSONAL DETAILS
    • PAYMENT DETAILS
    • ACADEMIC DETAILS
    • END (PRINT)

இவற்றை சற்று விளக்கமாக காணலாம்..........

1.NEW USER REGISTRATION:
இங்கு முதலில் “NEW USER REGISTRATION” என்ற பட்டனை  அழுத்தவும்.இது அடுத்த பக்கத்திற்கு இட்டு செல்லும்.இதில் கீழ்க்கண்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
    இதில் “USER ID” என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரை பதிவு செய்யவும்.இங்கு நீங்கள் பதிவுசெய்யும் “USER ID” மற்றும் “PASSWORD”-யை குறித்துவைத்துக்கொள்ளவும்.

மேலே உள்ள அணைத்து தகவல்களையும் பதிவு செய்த பின் “USER CREATED SUCCESFULLY” என்று வரும்.

2.REGISTERED USER LOGIN:

 அடுத்து கீழ்க்கண்ட இணைப்பை அழுத்தவும்.
அது கீழ்க்கண்ட பக்கத்திற்கு இட்டு செல்லும்.இதில் முன்பே நாம் கொடுத்த “USER ID மற்றும் PASSWORD” யை பதிய வேண்டும்.
அதை தொடர்ந்து வரும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

3.PERSONAL DETAILS:

அதன் பின்பு விண்ணப்ப கட்டணத்தை செலுத்த விரும்பினால் "PROCEED TO PAYMENT" என்ற பட்டனை அழுத்தவும்.விண்ணப்ப கட்டணம் செலுத்தும் பக்கத்திற்கு இட்டு செல்லும்
நீங்கள் பிறகு விண்ணப்ப கட்டணம் செலுத்த விரும்பினால்  "SAVE AND EXIT" என்பதனை அழுத்தவும்.இதுவரை நீங்கள் பதிவு செய்த தகவல்கள் அனைத்தும் நினைவில் சேமித்து வைக்கப்படும்.அதன் பின் நீங்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த விரும்பும் நேரத்தில் உங்களின் "USER ID,PASSWORD"யை பதிவு செய்து நேரடியாக விண்ணப்ப கட்டணம் செலுத்தும் பக்கத்திற்கு செல்லலாம்.


4.PAYMENT DETAILS:
விண்ணப்ப கட்டணங்களை செலுத்த கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தலாம் :


  • NET BANKING(அணைத்து வங்கிகள்)
  • DEBIT CARD(அணைத்து வங்கிகள்)
  • CREDIT CARD(அணைத்து வங்கிகள்)
  • DEMAND DRAFT
  • INDIAN BANK CHALLAN(இந்தியன் வங்கி மட்டும்)
    
பொது பிரிவு மாணவர்களுக்கு ரூ.500/- பட்டியலின மாணவர்களுக்கு ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்தப்படவேண்டும் .

STATE BANK மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு கீழ்க்கண்ட பக்கங்கள் தோன்றும்.







5.ACADEMIC DETAILS:
           விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின்னர்ACADEMIC DETAILS” என்ற பக்கத்திற்கு இட்டு செல்லும் .இங்கு தேர்வில் மாணவர் பெற்ற மதிப்பெண்களை பூர்த்தி செய்ய வேண்டும்

5.END (PRINT):
              மாணவரின் மதிப்பெண்களை பூர்த்தி செய்த பின் பின்னர்END(PRINT) என்ற பக்கத்திற்கு செல்லும்.இதுவே விண்ணப்ப படிவத்தின் கடைசி பகுதி ஆகும்.இதில் நாம் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை காணலாம்.அதன் பின்பு அதின் “PRINT” செய்து
விண்ணப்பத்தினை காணலாம்.அதன் பின்பு அதின் “PRINT” செய்து

The Secretary

Tamil Nadu Engineering Admissions

Anna University

Chennai – 600 025


என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

        
முக்கிய குறிப்பு :
   தேர்வு முடிவுகள் வெளியான பத்து நாட்களுக்குள்   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டும்.
                                                                

விண்ணப்ப படிவத்துடன் இணைக்கப்படவேண்டிய நகல்கள்
     

  1.   10th Mark Sheet
  2. HSC / Equivalent Mark Sheet*(இணையத்தில் பதிவிறக்கம் செய்த மதிப்பெண்         சான்றிதல்)
  3.  Transfer Certificate*
  4. Permanent Community Certificate Card for ST, SC, SCA, MBC & DNC, BC      and    BCM (Permanent card / electronic form/digitally signed e-Certificate)               
  5.  HSC Hall Ticket
  6.  Nativity Certificate only in electronic form/digitally signed e-Certificate – If          applicable
  7. First Graduate Certificate and First Graduate Joint Declaration (only in            electronic  form/digitally signed e-Certificate) – If applicable
  8. Srilankan Tamil Refugee certificate – If applicable
  9. Relevant certificates for Son / Daughter of Ex-Serviceman, Son / Daughter of   Freedom Fighter,Differently Abled Person and Eminent Sports Persons – If        applicable
  10. Demand draft – If applicable




No comments:

Post a Comment