நவ.18-இல் வேலைவாய்ப்பு முகாம்
By DN
First Published : 13 November 2015 08:17 PM IST
பெங்களூருவில் நவ.18 ஆம் தேதி வேலைவாய்ப்புமுகாம் நடத்தப்படுகிறது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளுக்கான தொழில்கல்வி மறுவாழ்வு மையத்தின் சார்பில் பெங்களூரு, பீன்யா 1-ஆவது ஸ்டேஜ், முதலாவது 'பி' மெயின், முதலாவது குறுக்குத்தெருவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்கல்வி மறுவாழ்வு மைய வளாகத்தில் நவ.18 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணிவரை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புமுகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்சாரா, நிதி, ஆட்டோமொபைல், உற்பத்தி, விருந்தோம்பல், மெக்கேனிக்கல் துறைகளை சார்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
வேலைவாய்பு முகாமில் எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோர், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரி மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளலாம். புதியவர்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் பங்கேற்கலாம்.
வேலைதேடி வருவோர் தன்விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், மாற்றித்திறனாளி உறுதிசான்றிதழ் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-22259351/22374582/22261184/22289668/28478423/23626678 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment