Search This Blog

Sunday, November 22, 2015

காவல்துறை சட்ட ஆலோசகர் பணிக்கு வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

காவல்துறை சட்ட ஆலோசகர் பணிக்கு வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணியாற்ற, தகுதியுள்ள வழக்குரைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

 இது குறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி:

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிர்வாகத்திலும், குற்ற வழக்குகளிலும் ஆலோசனை வழங்குபவராக செயல்பட வழக்குரைஞர் தேவைப்படுகிறார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

 சட்டப் படிப்பு முடித்து பார் கவுன்சிலில் உறுப்பினராக இருப்பவர்கள், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டு பணியாற்றிய, குற்ற வழக்குகளில் தொடர்பில்லாதவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள்.

 விருப்பமுள்ள வழக்குரைஞர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நவம்பர் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment