Search This Blog

Wednesday, February 3, 2016

ரயில்வே பாதுகாப்பு படையில் 2030 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில்வே பாதுகாப்பு படையில் 2030 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By வெங்கடேசன். ஆர்

First Published : 02 February 2016 10:00 AM IST

செகேந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.), ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை (ஆர்.பி.எஸ்.எப்.) போன்ற போலீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள 2030 கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான இந்திய குடியுரிமை பெற்ற பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 2030

பணி: கான்ஸ்டபிள்

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 1.7.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.1991 - 1.7.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும்.

உடல்தகுதி: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு குறைந்தபட்சம் 157 சென்டிமீட்டர் உயரம் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 152 செ.மீட்டர் உயரம் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை என்.சி.சி. விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.scr.indianrailways.gov.in  அல்லது www.rpfonlinereg.in  என்ற இணையதளங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment