Search This Blog

Thursday, February 4, 2016

டிப்ளமோ முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி

டிப்ளமோ முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி

By வெங்கடேசன். ஆர்

First Published : 04 February 2016 10:58 AM IST

நீர்வழி மற்றும் ஆகாய வழிகள் மூலம் நமது சர்வதேச நீர் எல்லைகளைக் காப்பதில் பெரும் பங்கு வகித்து வரும் கடலோரக் காவல் படையின் (இந்தியன் கோஸ்ட் கார்டு) யாந்திரிக் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 18 - 22க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், டெலி கம்யூனிகேஷன் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விளையாட்டுகளில் சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உடல் தகுதி: உயரம் குறைந்தபட்சம் 157 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் குறைந்த பட்சம் 5 செ.மீட்டர் மார்பளவும், உயரத்திற்கு நிகரான எடையும் கொண்டிருக்க வேண்டும். நல்ல கண்பார்வையும், கேட்கும் திறனும் கொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவப்பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: தமிழகத்தில் சென்னை நடைபெறும். நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment